100க்கும் மேற்பட்ட ஆடவர்கள் கலந்து கொண்ட ‘Gay Meeting’! Condom பெட்டிகள்,  HIV மருந்துகள் பறிமுதல் 

கோத்தா பாரு,

கிளந்தான் மாநிலத்தில், ஜாலான் கெமுமின் பகுதியில் உள்ள பங்களாவொன்றில் 100க்கும் மேற்பட்ட உள்ளூர் ஆடவர்கள் கலந்து கொண்டதாக கூறப்படும் ‘Gay’ சமூக சந்திப்பொன்றில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதை மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசொஃ மமாட் இன்று உறுதிப்படுத்தினார்.

இது குறித்து இன்று கிளந்தான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:

“பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் மற்றும் உளவுத்துறையின் கண்காணிப்பின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ‘Food party” என்ற பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது ‘Gay ‘ சமூகத்தை குறிவைத்து அமைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.”

அதிகாலை 1 மணி அளவில் திடீர் அதிரடி சோதனை நடத்திய போது, அந்த நிகழ்வில் 100 ஆடவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும்பாலானோர் ஏற்கெனவே சென்றுவிட்டதாகவும் , 20 பேர் மட்டுமே அந்த இடத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையின்போது நிகழ்விடம் ஒன்றில் நூற்றுக்கணக்கான Condom பெட்டிகள், பல HIV மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மூன்று நபர்களின் கைபேசிகளில் ‘ ‘Gay” தொடர்பான சில வீடியோ காட்சிகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்த மூன்று நபர்களுக்கு மட்டும் போலிஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக்க அவர் கூறினார்.

“சோதனையின் போது அவர்கள் அனைவரும் உடைகள் அணிந்திருந்தனர். நேரடி பாலியல் செயல்கள் எதுவும் எதுவும் நடந்ததாக ஆதாரம் இல்லை. ஆனால் Condom மற்றும் HIV மருந்துகள் இருப்பது, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக காட்டுகிறது,” என்றார் அவர்.

அந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்களாகும். அவர்களில் சிலர் அரசு ஊழியர்கள் என்றும் சிலர் HIV நோயாளிகள் என்றும் தெரியவந்துள்ளது.

“இது கிளந்தானில் முதன்முறையாகப் பதிவான ‘Gay”’ சமூக நிகழ்வாகும். இத்தகைய மறைமுக நிகழ்வுகள் நோய்தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் என்பதால், போலீசார் இதனை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்,” என்றார் அவர்.

சமூக ஊடகங்கள் மற்றும் மெசேஜிங் செயலிகள் மூலம் பரவுகின்ற இத்தகைய நிகழ்வுகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் வழங்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here