சிரியா மீது இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்களை கண்டித்தார் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

சிரியாவின் தலைநகர் டமாஸ்க்கஸ் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக கண்டித்துள்ளார்.

இது சிரியாவின் இறையாட்சி மீதான தாக்குதலாகவும், 1974 இல் இஸ்ரேலும் சிரியாவும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மீறலாகவும் இருப்பதாக அவர் கூறினார்.

“சிரியா கடந்த ஒரு தசாப்தமாக பெரும் துன்பங்களை எதிர்கொண்டு வருகிறது. அதன் மக்களுக்கு அமைதி தேவை, மேலும் வன்முறை அல்லது வெளிநாட்டு தலையீடு தேவையில்லை,” என அவர் முகநூல் பதிவில் தெரிவித்தார்.

மலேசியா, சிரியா மக்களுடன் உறுதியுடன் நிற்கும் என்றும், இஸ்ரேலின் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, மனிதாபிமான மதிப்புகள் மற்றும் சட்டக் கொள்கைகளுக்கு உறுதிபட்சம் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேல் தாக்குதலில், சிரியா பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அதிபர் அலுவலகத்திற்கருகிலுள்ள பகுதிகள் சேதமடைந்துள்ளன. மேலும், தென் சிரியாவின் சுவைதா மாகாணத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here