Turun Anwar பேரணி நீதிக்காக அல்ல – அரசியல் நோக்கத்திற்காக என்கிறார் பிரதமரின் உதவியாளர்

கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர், வரவிருக்கும் “Turun Anwar” பேரணியை, கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகும்  அரசியல் ரீதியாக லாபம் பெறவிருப்பவர்களின் சூழ்ச்சி என்று தெரிவித்தார். ஜூலை 26 போராட்டத்தை பொதுமக்களின் விரக்திக்கான பிரதிபலிப்பாக அமைப்பாளர்கள் வடிவமைத்துக்கொண்டிருந்தாலும் அவர்களின் உண்மையான நோக்கம் வேறு இடத்தில் உள்ளது என்று ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின் கூறினார்.

இது மக்களைப் பற்றியது அல்ல, வாக்குப் பெட்டி மூலம் அவர்கள் அடையத் தவறியதை மாற்றியமைக்க முயற்சிக்கும் ஒரு சிறிய குழுவைப் பற்றியது என்று அவர் மலேசியாவின் தேசிய வர்த்தகம், தொழில்துறை சபை ஏற்பாடு செய்த தேசிய பொருளாதார மன்றத்தில் தனது உரையில் கூறினார். பெரிக்காத்தான் நேஷனல், டத்தாரான் மெர்டேகாவில் நடைபெறும் பேரணிக்கு 300,000 பங்கேற்பாளர்களை ஈர்க்க இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை 6 அன்று ஷா ஆலமில் நடைபெற்ற ஒரு சிறிய போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுதந்திரமான – நியாயமான தேர்தல் மூலம் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னர் நிறுவனச் சிதைவு மற்றும் நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மையில் உள்ள பலவீனங்கள் போன்ற முந்தைய நிர்வாகங்களால் விட்டுச் செல்லப்பட்ட நீண்டகால பிரச்சினைகளைத் தீர்க்க அயராது உழைத்து வருவதாகவும் ஷம்சுல் கூறினார்.

ஜனநாயகத்தை அவமதிப்பதன் மூலம் நீங்கள் அதை சரிசெய்ய முடியாது என்று அவர் கூறினார். ஜனநாயக செயல்முறையை சிதைக்கும் முயற்சிகளுக்கு எதிராக எச்சரித்தார். மாற்றத்தை விரும்பினால், அடுத்த தேர்தலில் போட்டியிடுங்கள். அதுதான் ஜனநாயக வழி. இந்த போராட்டம் நீதிக்கான இயக்கம் அல்ல என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here