ஈப்போ,
ஈப்போவில் 73 வயதுடைய ஓய்வுபெற்ற ஒரு முதியவர், தொலைபேசி மோசடிக் குழுவால் ஏமாற்றப்பட்டு RM 1.58 லட்சத்தை இழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்த முதியவருக்கு “ஒரு காப்பீட்டு நிறுவனத்திற்கு நீங்கள் செலுத்தவேண்டிய ஒரு தொகை பணம் உள்ளது” என ஒரு அழைப்பு வந்துள்ளது. அழைப்பை ஏற்படுத்திய நபர் தாம், பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்திலிருந்து ஒரு அழைப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு முதியவரை ஏமாற்றியுள்ளார் ,” என ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனல் அபிடின் கூறினார்.
மேலும் அழைத்த அந்த நபர், முதியவரிடம் நீங்கள் ஒரு RM 2 மில்லியனுக்கு மேற்பட்ட பண மோசடி வழக்கில் தொடர்புடையவர் என்றும், உங்களுக்கெதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதனால் பீதி அடைந்த முதியவர், விசாரணைக்காக அவசரமாக பணம் மாற்ற வேண்டும் என கூறிய அந்த நபரின் 12 வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பினார்.
பின்னர் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த அவர், நேற்று போலீசில் புகார் பதிவு செய்தார். இவ்வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் அத்தியாயம் 420 -இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
























