ஆஸி.யில் இந்தியர் மீது மர்ம கும்பல் திடீர் தாக்குதல்: இனவெறி காரணமா என விசாரணை

சிட்னி:

ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடிலெய்டு நகரத்தின் முக்கிய பகுதியான கின்டோர் அவின்யூ என்ற இடத்தில் சரண்ப்ரீத் சிங் என்பவர் தமது காரில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிலர், அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். வலி தாங்க முடியாத அவர், அங்கேயே மயங்கி சரிந்தார்.

பின்னர், சரண்ப்ரீத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகத்தின் பல இடங்களில் கொடூர காயங்கள், எலும்பு முறிவு ஏற்பட்டதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வரும் நிலையில் இதுதொடர்பான விசாரணை தொடங்கிய போலீசார், சந்தேகத்தின் பேரில் வாலிபரை கைது செய்துள்ளனர். உடன் இருந்த மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இனவெறி தாக்குதலாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்தியர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தாக்குதலை அறிந்த அங்கு வாழும் இந்தியர்கள் கடும் கண்டனத்தை பதிவிட்டு வருவதோடு அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here