கொழும்பு:
இலங்கை முழுவதும் ஜூலை 26 மற்றும் 27தேதிகளில் இடம்பெற்ற சிறப்பு சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களுக்காக 1,182 பேர் கைது செய்யப்பட்டதாக இலங்கை போலிஸார் அறிவித்துள்ளனர்.
இச்சுற்றிவளைப்பில் போலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் முப்படையினரும் ஈடுபட்டனர்.
சோதனையின் போது,கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன், ஹெரோயின் போன்ற பல போதைப்பொருட்களை கைப்பற்றப்பட்டன.
மேலும், குற்றச்செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 20 பேர், மற்றும் பல்வேறு வழக்குகளுக்கான பிடியாணை கொண்ட 410 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சுற்றிவளைப்பின் போது, 24,343 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், 9,727 வாகனங்களும், 7,396 மோட்டார் சைக்கிள்களும் சோதனைக்குட்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
சுற்றிவளைப்பில் மொத்தம் 8,000 க்கும் மேற்பட்ட படையினர்பங்கேற்றனர்.இதன்போது நான்கு சட்டவிரோத துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.









