அரியலூர்:
அரியலூர் அருகே அரசு பேருந்துக்குள் புகுந்து இளைஞரை கட்டை, பட்டா கத்தியால் சரமாரியாக தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் இறவாங்குடியை சேர்ந்தவர் சிவக்குமார்(38). இவர், தனது டூ வீலரில் கல்லாத்தூரிலிருந்து சொந்த ஊருக்கு நேற்று திரும்பிகொண்டிருந்தார். அப்போது வெயிலின் தாக்கம் காரணமாக முன்னூரான் காடுவெட்டி பஸ்நிறுத்தம் அருகே மரத்தடி நிழலில் சிவக்குமார் நின்றுள்ளார்.
ஆனால் அவரை 6 பேரும் விரட்டிச் சென்று சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தில் ஏறி சிவக்குமார் தப்பிக்க முயன்றார். ஆனாலும் விடாமல் துரத்தி வந்த அந்த கும்பல், பேருந்தில் ஏறி சிவக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். இதனை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிவக்குமார் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி முன்னூரான் காடுவெட்டியை சேர்ந்த வினோத்(23), துரைராஜ் மகன் கார்த்தி(26), தேவேந்திரன் மகன் கலியமூர்த்தி(23), கிருஷ்ணமூர்த்தி மகன் செல்வமணி(20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். ேமலும் 2 பேரை தேடி வருகின்றனர்.








