போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட குண்டர் கும்பல் தலைவன்

கோலாலம்பூர் ஜாலான் புக்கிட் துங்குவில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு கும்பல் தலைவன் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சந்தேக நபருக்கு 44 முந்தைய வழக்குகளில் குற்றப் பதிவு இருப்பதாகவும், கோலாலம்பூர், சிலாங்கூர், பேராக்கில் வீடு உடைப்பு, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு குழுவின் பின்னணியில் அவர் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படுவதாகவும் புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.

புக்கிட் அமான் சிஐடி மற்றும் கோலாலம்பூர் காவல் தலைமையகம் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது அதிகாலை 4.10 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு துப்பாக்கியும் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக ஃபாடில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here