தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட நபர்மீது போலீசார் விசாரணை தொடர்கிறது

கப்பளா பாத்தாஸ்

கப்பளா பாத்தாஸ் பகுதியில் உள்ள ஒரு கடையின் எதிரே, ஒருவர் மலேசிய தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிடுவதும், மற்றொருவர் அதனை கைபேசியில் பதிவு செய்வதும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, பெரும் எதிர்ப்பு எழுந்தது.

செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாவது, இச்சம்பவம் தொடர்பாக போலீசார் பூர்வாங்க விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட சந்தேக நபர் மற்றும் புகார்தாரரிடம் வாக்குமூலம் எடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 1963 சின்னம் மற்றும் பெயர் சட்டத்தின் 5வது பிரிவு, 1955 சிறுகுற்றச் சட்டத்தின் 14வது பிரிவு மற்றும் 1998 தொடர்பு மற்றும் பல்லுடகச் சட்டத்தின் 233வது பிரிவின் கீழ் விசாரணை நடக்கிறது.

அரசு சாரா அமைப்புகள் உட்பட பெர்த்தாம் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கான் மற்றும் நைனா மரிக்கான் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்தத் 21 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பொதுமக்களில் கடும் கண்டனத்துக்கு வழிவகுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here