ருத்ராதேவி சமாஜத்தின் 7ஆம் ஆண்டு ஆடி தேர் திருவிழா

ஆடி மாதம் அம்பாளுக்கு உகந்த மாதமாகும். இந்த சிறப்பான ஆடி மாதத்தில்  கம்போங் காசிப்பிள்ளை ருத்ராதேவி சமாஜத்தின் 7ஆம் ஆண்டு தேர் திருவிழா 100க்கும் மேற்பட்டோர் புடைசூழ விமரிசையாக நடந்தேறியது.

 

சமாஜத்தின் நடப்புத் தலைவரும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான குணராஜ் ஜார்ஜ் கூறுகையில் ஆண்டுதோறும் மிகவும் விமரிசையான முறையில் நடைபெற்று வருவதாக முன்பு பல்லக்கில் வலம் வந்த அம்பாள் கடந்த 7 ஆண்டுகளாக தேரில் வலம் வருவதாகத் தெரிவித்தார்.

சமாஜத்தின் ஸ்தாபகர் சங்கரத்னா ப.சுப்பிரமணியம் பேசுகையில் சமாஜத்தில் நடைபெறும் பூஜைகள், விழாக்கள் சிறப்பாக நடைபெற சமாஜத்தின் உறுப்பினர்களும் நல்லுளங்களும் வழங்கி வரும் ஆதரவு என்று கூறினார். நடப்புத் தலைவர் குணராஜ் தலைமையில் சமாஜத்தில் அனைத்து விழாக்களும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

7ஆம் ஆண்டாக நடைபெற ருத்ராதேவி சமாஜத்தின் ஆடிமாத தேர் திருவிழாவில் பஜன், கோலாலாட்டம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here