இன்று இரவு 8 மணி வரை 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு

கோலாலம்பூர்:

ன்று (வெள்ளி) இரவு 8 மணி வரை கிள்ளான், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துறையின் தகவல்படி, இதேபோன்ற வானிலை கோலாலம்பூர், பெர்லிஸ், கெடா, கிளந்தான், திரெங்கானு, பினாங்கு, பேராக், பகாங், சரவாக், சபா மற்றும் லாபுவான் மாநிலங்களிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு மணி நேரத்தில் 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன.

மேலும் இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் குறுகிய கால எச்சரிக்கைகள் ஆகும், மேலும் இவை வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

MetMalaysia, சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்காக பொதுமக்கள் www.met.gov.my இணையதளத்தைப் பார்வையிடவும், அதன் சமூக ஊடக கணக்குகளைப் பின்தொடரவும், myCuaca செயலியை பதிவிறக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here