ஜாராவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்: பிரதமர்

லாரூட்: முதலாம் வகுப்பு மாணவி ஜாரா கைரினா மகாதீரின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார், சம்பந்தப்பட்ட எவரும் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கும் விதத்தில் அல்லது குறிப்பிட்ட நபர்களை அவமதிக்கும் வகையில் வழக்கை கையாள வேண்டாம் என்று அன்வார் சில தரப்பினருக்கு அறிவுறுத்தினார். காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் யார் (சம்பந்தப்பட்டவர்கள்) என்பது முக்கியமல்ல. அவர்கள் விசாரிக்கப்படுவார்கள் என்பதை நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என்று இன்று புதிய பேராக் பால் பண்ணை வளாகத்தில் மடானி பால் தொழில்முனைவோர் திருவிழாவை தலைமை தாங்கி உரையாற்றும் போது அவர் கூறினார்.

பேராக் மந்திரி புசார் சாரானி முகமது, விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமது சாபு, கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் ஆகியோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here