ஷா ஆலம்: கிள்ளான் செந்தோசாவில் கடை வீட்டில் தீ விபத்து – நான்கு பேர் மீட்பு

ஷா ஆலம்

கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு கடை வீட்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர் உட்பட நான்கு பேர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மூன்று மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது படிக்கட்டுகளில் அடர்ந்த புகை சூழ்ந்ததால் 17 முதல் 81 வயதுடைய நால்வரும் சிக்கிக்கொண்டனர் என   சிலாங்கூர் தீயணைப்பு துறையின் உதவி நடவடிக்கை இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

முதல் தளத்தில் 20 x 30 சதுர அடி பரப்பளவு கொண்ட பகுதியில் தீ வெற்றி 50 சதுர அடி பகுதியை சேதமாக்கியது. அந்த நால்வர் – ஒரு ஆடவர் மற்றும் மூன்று பெண்கள் – மூன்றாவது மாடியில் இருந்த நிலையில் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர்.

காலை 6.16 மணிக்கு தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. இந்த பணியில் அண்டலாஸ், தென் கிள்ளான் மற்றும் வட கிள்ளான் தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர் என்று முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here