கூச்சிங்கில் உள்ள ஷாப்பிங் மாலில் இருந்து தவறி விழுந்து ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுப்பு

கூச்சிங்:

இன்று மதியம் இங்குள்ள ஜாலான் சாங்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் இருந்து ஒருவர் தவறி விழுந்து, உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சரவாக் பொது மருத்துவமனை (SGH) அவசர சிகிச்சை பிரிவுக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது. பாதிக்கப்பட்டவர் ஷாப்பிங் மாலிலிருந்து விழுந்ததில் இருந்து இறந்துவிட்டார் என்பதை அங்குவந்த துணை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

குறித்த சம்பவ இடத்தில் தனிப்பட்ட அடையாளங்களோ குற்றவியல் கூறுகளோ எதுவும் கிடைக்கவில்லை.

போலீஸ் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது, மேலும் விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் என்று அறியமுடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here