கெரிக்கில் நடந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

ஈப்போ, கெரிக்-ஜெலி கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் (JRTB) 45ஆவது கி.மீட்டரில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் டிரெய்லர் லோரியுடன் மோதியதில் இறந்தார். கெடா, பாலிங்கைச் சேர்ந்த 36 வயதான ரோசிமான் அபு அஜீஸ், கோல தெரெங்கானுவின் கோங் படாக்கில் நடைபெறும் RXZ 7.0 பேரணிக்கு சென்று கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

கெரிக் காவல்துறைத் தலைவர் அப்துல் சமாட் ஓத்மான் கூறுகையில், காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றும், கெரிக் திசையில் இருந்து ஜெலி நோக்கிச் சென்ற பாதிக்கப்பட்டவர், ஒரு வளைவில் மோட்டார் சைக்கிள் ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்து, பின்னர் எதிர் பாதையில் சறுக்கி, வால்வோ டிரெய்லரின் வலது பம்பரில் மோதியதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர் பலத்த காயமடைந்தார். கெரிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் டிரெய்லர் ஓட்டுநர், 44 வயதான உள்ளூர் நபருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று அவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here