மலாயா பல்கலைக்கழகம் மருத்துவ புலத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சிவகுமார் கிருஷ்ணசாமி ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்து மருத்துவத் துறைக்கும் மலேசியாவுக்கும் ஒரு மிகப் பெரிய அங்கிகாரத்தை பெற்று தந்துள்ளார்.
எடின்பெர்க் சர்ஜர்ன்ஸ் அரச கல்லூரியின் (Royal College of Surgeons of Edinburg) ஃபெல்லோஷிப் ஆஃப் தி ஃபக்கல்டி ஆஃப் சர்ஜிக்கல் டிரெய்னர்ஸ் Fellowship of the Faculty of Surgical Trainer பெற்ற முதல் மலேசியராக அவர் முத்திரைப் பதித்திருக்கிறார்.
அறுவை சிகிச்சை கல்வியில் அவரின் அர்ப்பணிப்பு, நனிச் சிறந்த போதனை, பங்களிப்பு ஆகியவற்றுக்கு கிடைத்திருக்கும் ஓர் உண்மையான அங்கிகாரத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இது பேராசிரியர் டாக்டர் சிவகுமாரின் சாதனைகளின் ஒரு மைல் கல்லாக தடம் பதித்திருக்கிறது.
அவரின் இந்த வரலாற்றுப்பூர்வ சாதனை பல மருத்துவ துறைகளுக்கும் அதற்கு அப்பாலும் ஓர் உத்வேகத்தை தந்திருக்கிறது.
மகத்தான சாதனைப் படைத்திருக்கும் பேராசிரியர் டாக்டர் சிவகுமாருக்கு மக்கள் ஓசை தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
























