கோலாலம்பூர்:
2024 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை, இணையக் குற்றங்களால் மலேசியாவிற்கு RM1.22 பில்லியனுக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் (Datuk Seri Mohd Khalid Ismail) தெரிவித்தார்.
‘ மூன்றாவது காவல்துறை சிறப்பு கலந்துரையாடல் 2025’ (Police Special Dialogue III 2025) எனும் நிகழ்ச்சியில் பேசிய அவர், இணைய மோசடிகள், அடையாளத் திருட்டு, தரவு மீறல் போன்ற இணைய அச்சுறுத்தல்கள், ஆண்டுக்கு ஆண்டு 1,100 விழுக்காடு அதிகரித்துள்ளன என்றும் கூறினார்.
இந்த இணையக் குற்றங்கள், நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, நம்பிக்கைக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
எனவே, காவல்துறை, டிஜிட்டல் தடயவியல், உளவுத்துறை, முகவர் ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை விரைவாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இணையப் பாதுகாப்பு என்பது, அரசாங்கம், தனியார் துறை, சமூகம் ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு என்று காலிட் இஸ்மாயில் வலியுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, இந்தக் கலந்துரையாடலில், டிஜிட்டல் பாதுகாப்பு, சட்டம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தீர்வுகள் குறித்து விவாதிக்க, 550 துறை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.





















