தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து சம்மன்களுக்கு 50% தள்ளுபடி

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 16 வரை காவல்துறையினரால் வழங்கப்பட்ட் அனைத்து போக்குவரத்து சம்மன்களுக்கும் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தேசிய தினம், மலேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்து வழங்கப்படும் இந்த தள்ளுபடி, MyBayar PDRM காவல்துறை கட்டண வலைத்தளம் வழியாக செய்யப்படும் கட்டணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த தள்ளுபடி மலேசியர்களுக்கான அரசாங்கத்தின் நன்றியின் அடையாளமாகும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் இன்றிரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார். பொது சேவைகளின் டிஜிட்டல் மாற்றத்தின் ஒரு பகுதியாக MyDigital ID ஒற்றை உள்நுழைவு முறையைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த மாத தொடக்கத்தில், சாலைப் போக்குவரத்துத் துறையின் மொபைல் போன் செயலியான MyPay PDRM மற்றும் MyJPJ ஆகியவற்றை எளிதாக அணுகுவதை உறுதிசெய்ய, மலேசியர்கள் MyDigital ID-க்கு பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here