காயத்ரி பட்டுமாளிகையின் 38ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 38 ரிங்கிட்டிற்கு பட்டுச் சேலைகள் – டத்தோ ரகுமூர்த்தி

ஆடைகளை விரும்பாதோர் யாருமில்லை. அதிலும் பெண்களுக்கு ஆடை என்றால் அலாதி  பிரியம் என்றால் அது மிகையாகாது.  மேலும் தீபாவளிக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் வேளையில் காயத்ரி பட்டு மாளிகை தனது 38ஆம் ஆண்டு   விழாவினை கொண்டாடியது.

1988ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காயத்ரி பட்டு மாளிகைக்கு வாடிக்கையாளர்களின் வழங்கி வரும்  வற்றாத ஆதரவினால்  நாங்கள்  38ஆவது ஆண்டினை நிறைவு செய்திருக்கிறோம்.   எங்களுக்கு ஆதரவு வழங்கிய வாடிக்கையாளர்களுக்காக கையிருப்பு இருக்கும் பட்டுச் சேலைகள்  38 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் என்று நிறுவன உரிமையாளர் டத்தோ ரகுமூர்த்தி தெரிவித்தார்.

எங்களுடன் 38 ஆண்டுகளாக  பயணிக்கும்  அனைத்து வாடிக்கையாளர்களுக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் வியாபாரம் செய்யவோ அல்லது தீபாவளிக்கு மொத்த விலையில்  ஆடைகளை எடுக்க விரும்பினால் உங்கள் குடும்ப நிறுவனமாக காயத்ரி பட்டுமாளிகைக்கு வரலாம்.

 

இந்தவேளையில் காயத்ரி கேஷ்& கேரி  தொடங்கி 38 ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில் கிடைக்கும் அனைத்து எவர்சில்வர், பித்தளை பாத்திரம், பூஜை பொருட்களும்  சிறந்த தரத்துடன் மிகவும் நியாயமான விலையில் வாங்கி கொள்ளலாம் என்று டத்தோ ரகுமூர்த்தி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here