ஜோ லோவை கண்டுபிடிக்க அனைத்துலக ஒத்துழைப்பை நாடும் மலேசியா

1மலேசியா மேம்பாட்டு பெர்ஹாட் (1MDB) ஊழல் தொடர்பாக லோ டேக் ஜோ அல்லது ஜோ லோவைக் கண்டுபிடித்து மீண்டும் அழைத்து வருவதற்கு மலேசியா அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. புக்கிட் அமானின் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (CCID), இன்று ஒரு அறிக்கையில், அனைத்துலக அதிகாரிகளுடன் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ள உள்துறை அமைச்சகம் மூலம் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியது.

முன்னர், ஜோ லோ சீனாவில் இருப்பதைக் குறிக்கும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியிருந்தார். எனவே, சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் மலேசியா அனைத்துலக சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளபடி, ஜோ லோவை போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதற்கோ அல்லது ஷாங்காயில் அவர் இருந்ததற்கோ தொடர்புபடுத்தும் எந்த சரிபார்க்கப்பட்ட ஆதாரமும் இன்றுவரை இல்லை என்றும் CCID வலியுறுத்தியது. சமீபத்தில், IMDB ஊழலில் சிக்கிய ஜோ லோ, ஷாங்காயில் உள்ள ஒரு பிரத்யேக பகுதியில் போலி ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி வசித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here