அலோர்ஸ்டார்:
யான் அருகிலுள்ள குவார் செம்பெடக் தாமன் நோனா பகுதியில், நேற்று இரவு 30 வயது ஆண் மற்றும் 28 வயது பெண் குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இரவு சுமார் 9.40 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் வந்தது. கூர்மையான ஆயுதம் ஒன்றால் காயப்படுத்தப்பட்டதால் இருவரும் உயிரிழந்ததாக நம்பப்படுவதாக யான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹமிசி அப்துல்லா தெரிவித்துள்ளார்:
ஒரு வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த புரோட்டான் வீரா காரின் முன்னிலைப் பயணியர் இருக்கையில் அந்த பெண் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அதே நேரத்தில், அந்த ஆண் சாலையில் முகம் குப்புற படுத்தபடி மரணமடைந்திருந்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காணவும், உயிரிழந்தவர்களுக்கிடையிலான உறவைத் தெளிவுபடுத்தவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.









