பிரதமர் பதவிக்கு விண்ணப்பிக்க எனக்கு வயதாகிவிட்டது என்கிறார் ஹாடி

அலோர் ஸ்டார்: பாஸ் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங், தனது வயது, உடல்நலம் காரணமாக அடுத்த பிரதமராக இருக்க தான் தகுதியற்றவர் என்று கூறுகிறார். 70 வயதுக்குட்பட்டவர்களாகவும்  ஆரோக்கியமாக வலிமையாக இருப்பவர்கள், களத்தில் மக்களுடன் இணைந்து பணியாற்றக்கூடியவர்கள் ஆகியோருக்கு இந்தப் பதவி மிகவும் பொருத்தமானது என்று அவர் கூறினார்.

எனக்கு ஏற்கெனவே 78 வயது; என்னைப் போன்ற ஒருவர் இனி பொருத்தமானவர் அல்ல. முதலில் ஆரோக்கியமானவர்களைத் தேர்ந்தெடுங்கள்… 70 வயதுக்குட்பட்டவர்களாக என்றும் பாஸ் அதன் தலைவர்களை இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது என்று திங்களன்று (செப்டம்பர் 15) இங்கு மத்திய 71ஆவது பாஸ் முக்தாமரை நிர்வகித்த பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here