தென் கொரிய வெளியுறவு அமைச்சர் மலேசியா வருகை

Look East கொள்கையின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நாடுகளுக்கிடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்காக, தென் கொரியாவின் உயர்மட்ட தூதர் இந்த வாரம் மலேசியாவுக்கு வருகை தருவார் என்று சியோலிலுள்ள வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் பார்க் ஜின், மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிரை சந்தித்து, விநியோகச் சங்கிலி, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிப்பதற்காக இரண்டு நாள் பயணமாக மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளார் என்று அது தெரிவித்துள்ளது.

மேலும் தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் தனது பயணத்தின் போது, மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் சந்திப்பார் என்றும், மலாயா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவார் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here