கூலாய்,
நேற்றிரவு, கூலாய், தாமான் பெர்மடா இம்பியான் பகுதியில், ஒரு ஹோண்டா காரில் பயணித்த ஒருவர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட ஐந்து டன் லோரியின் பின்புறத்தில் மோதிய பரிதாப சம்பவம் நடந்தது.
ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் அறிக்கையின்படி, சம்பவம் 10.36 மணிக்கு அவர்களுக்கு தெரிய வந்ததாகவும், சாலை வழியாக சென்றவர்கள் காரின் வயதான அந்த ஓட்டுநரைவெளியேற்ற உதவியதாகவும், ஆனால் முன்புற இருக்கையில் அமர்ந்திருந்த பயணி காரில் சிக்கி, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தலை துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு விரைவில் வந்ததால், மேலும் தீவிரமான நெருக்கடியை தவிர்க்க முடிந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காரின் வேகம், சாலை நிலை மற்றும் லாரி நிறுத்தப்பட்ட இடத்தின் காரணம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் சம்பந்தப்பட்ட பயணிகளின் குடும்பங்களுக்கு மற்றும் சமூகத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது.









