சுங்கை பட்டாணி: சகோதரனுக்காக காத்திருந்தவர் மீது தாக்குதல்!

கோலாலம்பூர்:

நேற்று சுங்கை பட்டாணி, `பாயா நஹு’ (Paya Nahu) பகுதியில் உள்ள, ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு, அருகில், தனது, சகோதரனுக்காக, காத்திருந்த, 30 வயது, ஆடவர், ஒருவர், அடையாளம் தெரியாத, நபர் ஒருவரால் தாக்கப்பட்டதால் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து, கெடா, கோலா மூடா, மாவட்ட காவல்துறைத் தலைவர், ACP ஹன்யான் ரம்லான் கூறுகையில், பாதிக்கப்பட்டவர், பிற்பகல், 3 மணியளவில், தனது, சகோதரரின், வீட்டிற்குச், சென்றுள்ளார். தனது, சகோதரன் அங்கு இல்லை என்பதை கண்டறிந்தப் பிறகு அவர் கீழே காத்திருக்க, சென்றார்.

திடீரென்று போதையில் இருந்ததாகக் நம்பப்படும் 20 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் அவரை அணுகி தாக்கத், தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களில் ஒருவர் காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, பிற்பகல், 3.55 மணியளவில், காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு, வந்தடைந்தனர்.

கைகளிலும் கால்களிலும் காயமடைந்த பாதிக்கப்பட்டவர் சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் (Sultan Abdul Halim Hospital), சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை, பெற்று வருகிறார்.

இதனிடையே சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உதவுவதற்கு தடுத்து வைப்பதற்கான விண்ணப்பம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

இந்த வழக்கு, குற்றவியல் சட்டம் பிரிவு 326-இன் கீழ், விசாரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here