கோலாலம்பூர்:
காப்பாா் தீயணைப்பு, மீட்பு நிலையத்தில், தீயணைப்பு வீரர் போல் நடித்து, மக்களை ஏமாற்றி, பணம் பறிக்கும் ஒரு நபர் குறித்து, சிலாங்கூர் தீயணைப்பு மீட்புத் இலாக (JBPM) எச்சரித்துள்ளது.
அடையாளம் தெரியாத அந்த நபர், நிதி உதவி தேவைப்படுவதாகக் கூறி, டிக் டாக் (TikTok) வழியாக மக்களைத் தொடர்பு கொண்டதாக, மாநில இயக்குநர் வான் முகமட் ரஸலி வான் இஸ்மாயில் (Wan Md Razali Wan Ismail) தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் அடிக்கடி செல்லும் உணவகம் ஒன்றில், அந்த நபர் தனது சொந்தப் பெயரில் ஒரு கியூஆர் குறியீட்டை (QR code) வழங்கி, உணவக உரிமையாளரை ஏமாற்றியுள்ளார்.
அத்துடன், தீயணைப்பு வீரர் போல் நடித்து, நான்கு உணவகங்களுக்குப் போலி உணவு ஆர்டர்களையும் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடிச் செயல்கள் குறித்து, காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு, இது போன்ற அழைப்புகள் வந்தால், எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















