இசைக் கலைஞரும் நடிகருமான சத்யாவிற்கு உடல் நல பாதிப்பு கண்டிருப்பது வருத்தமளிக்கிறது. எப்போதும் மகிழ்வூட்டும் நபராகவும், அனைவருக்கும் நெருங்கியவராகவும் இருக்கும் அவர், தீபாவளியான இந்த நேரத்தில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இடதுகாலை இழந்தது மிகவும் வேதனையளிக்கும் விஷயம் என்று மைடின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ வீரா டாக்டர் ஹாஜி அமீர் அலி மைடின் தெரிவித்தார்.
மைடின் “Mydin Prihatian” முயற்சியின் மூலம், அவரது செலவுச் சுமையை இலகுவாக்க உதவ நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர் எப்போதும் ஆரோக்கியத்துடனும் நீடித்த நலத்துடனும் வாழ பிரார்த்தனை செய்கிறேன் என்றும் அவர் கூறினார்.
மைடின் அனைத்து காலங்களிலும் சமூக கடர்பாடு வழி இனம் மதம் பாராமல் உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாட்டின் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சத்யாவிற்கு உதவுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் அவர். மைடின் பல நிகழ்ச்சிகளில் சத்யா கலந்து சிறப்பித்தையும் மைடின் அலி நினைவு கூர்ந்தார்.









