திருவனந்தபுரம் :
மலையாளத் திரையுலகில் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
காலை முதலே தொடங்கிய இந்த சோதனை, பல மணி நேரமாக நீடித்தது. அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களையும் மின்னணு சாதனங்களையும் கைப்பற்றியுள்ளதாகத் தெரிய வருகிறது.
இதே நேரத்தில், நடிகர் துல்கர் சல்மானின் இரு லக்ஷுரி கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் வருமானம் மற்றும் சொத்துக்களுடன் தொடர்புடைய விசாரணையின் ஒரு பகுதியாக பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் சோதனைக்கான துல்லியமான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. வருமான வரித்துறை தரப்பில் நாளை அல்லது விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரையுலகின் முன்னணி நடிகர்களை குறிவைத்து நடைபெற்றுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, ரசிகர்களும் தொழில்துறை வட்டாரங்களும் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




















