நியூயார்க்,நான் அதிபராக பதவி ஏற்ற பிறகு 7 போர்களை நிறுத்தி உள்ளேன். இந்தியா-சண்டையும் பாகிஸ்தான் என்னால் தான் தீர்க்கப் பட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.நேற்று நடந்த ஐ. நா.சபை கூட்டத்திலும் அவர் இதே கருத்தை வலியுறுத்தினார். இதனை இந்தியா நிராகரித்து உள்ளது.
இந்த நிலையில் 7 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் தனது ஆசையை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக பிரான்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியதாவது:-காசா போரை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல முடியும். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் அதிகாரம் அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.









