எஸ்.வெங்கடேஷ்
11. இந்த திட்டத்தில் இ-ஹைலிங் ஓட்டுனருக்கும் தகுதி பெற்ற மற்ற மலேசியர்களுக்கான தகுதிக்கூறுகள் தானா அல்லது அவர்களுக்கு மாறுபடுமா?
– இ-ஹைலிங். ஓட்டுனர்கள் குறிப்பாக முழு நேரமாக இந்த வேலையை செய்பவர்களுக்கு இந்த தகுதிக்கூறுகள் தேவைப்படுவதை அரசாங்கமும் உணர்கின்றது.
எனவே இவ்விவகாரத்திற்கு நல்லதோர் தீர்வு கிடைக்க அரசாங்கம் ஹி-ஹைலிங் நிறுவன தரப்புடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டு வருகின்றது.
12. தேவை ஏற்பட்டால் என் குடும்ப உறுப்பினர்களின் பூடி 95 பெட்ரோல் அளவை என் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாமா?
– முறைகேடுகள், கடத்தல் போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வண்ணம் இந்த திட்டத்தில் ஒருவரின் கணக்கில் உள்ள பெட்ரோல் மற்றவருக்கு மாற்ற அனுமதி இல்லை.

13. இத்திட்டத்தில் நானும் என் மனைவியும் அவரவர் மைகார்ட் அட்டையை பயபடுத்தி ஒரே வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பலாமா?
– தகுதி பெற்ற மலேசியர்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு அவரவர் மைகார்ட் உடன் வந்து தாராளமாக பூடி மடானி ரோன் 95 திட்டத்தின் கீழ் பெட்ரோல் நிரப்பலாம். ஆனால் மற்றவர் மைகார்ட் பயன்படுத்தி பெட்ரோல் நிரப்புவது அனுமதிக்கப்படாது.
14. மற்றவர் வாகன பயன்பாட்டிற்கு எனது BUDI95 கணக்கை பயன்படுத்தலாமா?
– உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வாகனங்களுக்கும் இந்த திட்டத்தை தாராளமாக பயன்படுத்தலாம்.























