கோலாலம்பூர்:
கூகுளில் ‘idiot’ என்று தேடினால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முகம் வருகிறது என்ற சர்ச்சை அவரையும், அவரது விசுவாசிகளையும் கடுமையான கோபத்தால் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில். அந்த Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன், Google தமக்கு எதிராக, தவறான தகவல்களை வழங்குவதாகவும், தன் கட்சிக்கு எதிராக செயல்படுவதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இப்போது அமெரிக்க பார்லிமென்டின் நீதித் துறைக்கான குழு விளக்கம் கேட்டிருந்தது.
அதன்படி ஆஜரான சுந்தர் பிச்சை “இணையத்தில் தேடப்படும் எந்த ஒரு தகவல்களுக்கும் மனிதர்களால் பதில் அளிக்கப்படுவதில்லை. கூகுள் தளமானது பயனர்கள் இணையத்தில் சேர்க்கின்ற அல்லது தேடுகின்ற அல்லது பதிவேற்றம் செய்கின்ற மில்லியன் கணக்கான key wordகளை அல்லது புகைப்படங்களை ஸ்கேன் செய்து வைத்திருந்து பின்னர் தேடப்படும் வார்த்தையுடன் தொடர்பானவைகளை தொகுத்து வழங்கும்.
அதாவது மக்கள் இணையத்தில் என்ன பதிவேற்றம் செய்கிறார்களோ அதையே வெளிப்படுத்துகிறது தவிர, கூகுள் சொந்தமாக அவற்றை உருவாக்குவதில்லை. கடந்த ஆண்டு மட்டும் 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தேடுதல்கள் நடந்துள்ளது. அவற்றுக்கெல்லலாம் எந்த மனிதர்களால் பத்திகளை வழங்க முடியாது என அவர் விளக்கம் அளித்துள்ளார்





















