கோலாலம்பூர்,
சிலாங்கூர் பெர்சத்து தொடர்புக்குழு தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு அக்கட்சியின் மாநில கூட்டமைப்பு பிரிவு ஆதரவு வழங்கியுள்ளது.
ஊடக சந்திப்புகள் வாயிலாக சில தரப்பினர் அஸ்மின் அலியை தனிப்பட்ட முறையில் சாடுவது கட்சியின் நற்பெயருக்குதான் களங்கம் ஏற்படுத்தும்.
எனவே அந்த நடவடிக்கைகளை தமது தரப்பு கடுமையாக எதிர்ப்பயாக சிலாங்கூர் பெர்சத்து கூட்டமைப்பு பிரிவு தலைவர் டத்தோ கோ கைக் மெங் சொன்னார். குறிப்பாக இது போன்ற நடவடிக்கைகள் சிலாங்கூரை பிடிக்க்கும் பெர்சத்து, பெரிக்காத்தானின் முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டையாகவும் அமைகிறது.
அதே சமயம் அஸ்மின் தலைமையில் பெரிக்காத்தான் கடந்த பொதித் தேர்தலில் சிலாங்கூரில் 22 சட்டமன்ற தொகுதிகளை வென்றெடுத்தது. எனவே பெர்சத்து கட்சியை வழி நடத்துவதற்கு ஏற்ற, தகுதியுடைய தலைவராக அஸ்மின் விளங்குகிறார் என்றும் கைக் மெங் குறிப்பிட்டார்.





















