மலாய், வரலாறு பாடங்களுக்கு முன்னுரிமை; கல்வியமைச்சு உடன் கலந்துரையாட உயர்க்கல்வி அமைச்சுக்கு உத்தரவு

கோலாலம்பூர்:

தனியார், அனைத்துலக பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் மலாய் மொழி, வரலாறு போன்ற முதன்மை பாடங்களுக்க முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு கல்வியமைச்சுடன் கலந்துரையாட உயர்க்கல்வி அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

உயர்க்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடிர் தாக்கல் செய்த பொதுக் கல்வி பாடங்கள் மறு ஆய்வு ( எம்பியு) திட்டத்தில் இந்த உத்தரவும் ஓர் அங்கமாகும்.

பொது பல்கலைக்கழகங்கள், மலேசிய தர மதிப்பீடு இலாகா, உயர்க்கல்வி தலைமைத்துவ அகாடாமி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம். பாதுகாப்புத்துறை அமைச்சு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான கலந்துரையாடல்களின் வாயிலாக இந்த எம்பியு திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறிவாற்றல்மிக்க, நாட்டின் மீது விசுவாசமிக்க தலைமுறையினரை உருவாக்க தேசிய விழிப்புணர்வை வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த தீர்மானம் அமைச்சரவை கூட்டத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது எனவும் பிரதமர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here