முகமட் சாபுவிற்கு ஐஜேஎன்னில் ‘வழக்கமான’ சிகிச்சைதான் ; அலுவலக தரப்பு விளக்கம்

கோலாலம்பூர்:

விவசாயம், உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தேசிய இருதய கழகத்தில் (ஐஜேஎன்) வழக்கமான சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவரின் அலுவலக தரப்பு இன்று தெளிவுப்படுத்தியது.

உடல் சோர்வு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதால் மருத்துவ அதிகாரிகள் அமைச்சரை ஓய்வெடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர். அதே சமயம் அவரின் உடல் நிலை சீராகவே உள்ளது.

ஆனாலும் அமைச்சர் போதிய அளவில் ஓய்வெடுக்க தற்போது வருகையாளர்கள் அவரை சந்திக்க பரிந்துரைக்கப்படவில்லை என்று அந்த அலுவலக தரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே அமானா கட்சியின் தலைவருமான 70 வயது முகமட் சாபுவிற்கு கடந்த 2023ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here