நாம் மாறவில்லை என்றால் நம்மால் முன்னேற முடியாது என்று பிரெஸ்மாவின் புதியத் தலைவர் டத்தோ முகமட் மோசின் அப்துல் ரசாக் அறைகூவல் விடுத்தார். காலத்திற்கேற்ப நம்முடையத் தொழிலில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதே வேளை அரசாங்கத்திடமும் நமது தொழிலாளர் கோரிக்கைகளை முன் வைப்போம் என்றார்.
அரசாங்கம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை தருவிக்க அனுமதி வழங்க மறுத்து வரும் வேளையில் செயற்கை நுண்ணறிவு (ஏ ஐ) தொழில் நுட்பத்துடன் நாம் வியாபாரத்தில் முன்னேற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் வாடிக்கையாளர்கள் உணவகங்களில் சொந்தமாக ஆர்டர் செய்யும் வழிமுறையையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதே போல் உணவகத்தில் காசாளராக (கேஷியர்) வெளிநாட்டினர் இருக்கக்கூடாது என்று கூறுகிறது. அதற்கு மாற்றாக ஃகியூ ஆர் உள்ளிட்ட மாற்று வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.









