இண்டியானா,அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் டேல் பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டேசி பெய்னி. 2001-ம் ஆண்டு ஜூலையில் அவருக்கு 15 வயது இருக்கும்போது, ராய் லீ வார்டு என்பவர் பெய்னியின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.
அப்போது ராய் லீக்கு வயது 29. இந்நிலையில், பெய்னி கதவை திறந்ததும் தன்னுடைய நாயை காணவில்லை. அதனை தேடி வந்தேன் என கூறி வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டியுள்ளார். சிறுமி பெய்னியின் கைகளை கட்டி போட்டு விட்டு, கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த திடீர் தாக்குதலில் அதிர்ச்சியடைந்த சிறுமி பலியானார். இந்த வழக்கில் ராய் லீக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. எனினும், 24 ஆண்டுகளாக சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளார்.
இறுதியாக கடந்த செப்டம்பரில், அவருக்கு இரக்கம் காட்ட கவர்னர் மைக் பிரான் மறுத்து விட்டார். இதன்படி, கடந்த 10-ந்தேதி 53 வயதில் விஷ ஊசி செலுத்தி ராய் லீக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பு, ஹாம்பர்கர், பிரெஞ்சு பிரை, வெண்ணெய் தடவிய அவித்த உருளைக்கிழங்கு, 12 பொரித்த இறால்கள், இனிப்பு உருளைக்கிழங்கு ஒன்று, சிக்கன் ஆல்பிரெடோ, ரொட்டி துண்டுகள் மற்றும் பிற வகையான உணவு பொருட்களை ஆர்டர் செய்து ராய் லீ சாப்பிட்டுள்ளார்.








