அஜெண்டா சூர்யாவின் 23ஆம் ஆண்டு தீபாவளி கொண்டாடப்படும்: கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்

தீபாவளி என்றாலே குதூகலம், கொண்டாட்டம் தான். அந்த கொண்டாடத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில் புக்கிட் ஜாலில் நடைபெறு  அஜெண்டா சூர்யாவின் 23ஆம் ஆண்டு தீபாவளி கார்னிவெல்லை இலக்கியவியல் துறை அமைச்சர் கோபிந்த் ஸொங் டியோ தொடக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

350 கடைகளுடன் 11ஆம் தேதி தொடங்கி தீபாவளியின் முதல் நாளான 19ஆம் தேதி வரை இந்த கார்னிவெல்  நடைபெற்று வருகிறது. தீபாவளி கார்னிவெலில் வரவேற்புரையாற்றிய அஜெண்டா சூர்யாவின் தலைமை செயல்முறை அதிகாரி ஜகாராவ் சிம்மான்கா தமதுரையில் 2002ஆம் ஆண்டு சிறிய அளவில் மறைந்த துன் சாமிவேலுவால் தொடங்கப்பட்டது.

இன்று இந்த தீபாவளி கார்னிவெலுக்கு ஆண்டுதோறும் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை புரிகின்றனர். மலேசியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கோர் இந்த தீபாவளி கார்னிவெலுக்கு வருகைப் புரிகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தீபாவளி கார்னிவெல்லை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றிய இலக்கியவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ காலத்திற்கேற்ப நம்முடைய வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பாக குடும்ப மாதர்கள் தங்களுடைய வருமானத்தை ஈட்ட முடியும். அதே போல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தற்போது உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நம்முடைய பிரதமர் 2030க்குள் நம்முடைய நாடு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பல தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்க ஊக்குவிக்குகிறார்.

நாம் அனைவரும் ஒரே மலேசியர்களாக இணைந்து ஏஐ தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்த நாடாக உருமாற அனைவரும் இணைவோம் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக  ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் 15 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இலக்கியவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here