பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று காலை படிவம் 4 மாணவர் ஒருவர் ஜூனியர் ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், படிவம் 2 மாணவரான சந்தேக நபர் மற்ற மாணவர்களையும் குத்திக் காயப்படுத்தியதாகவும் பெரித்தா ஹரியான் தெரிவித்தது. விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.










