ஷா ஆலாம், அக்டோபர் 16 –
பண்டார் உத்தாமாவில் தனது 16 வயதுச் சக பள்ளி மாணவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 14 வயதுச் சிறுவனிடமிருந்து கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டதைச் சிலாங்கூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
மீட்கப்பட்ட அந்தக் கடிதத்தில், “இந்த உலகம் போலியானது. நான் ஏற்கனவே வென்றுவிட்டேன்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியின் மீது சொல்லப்படாத உணர்வுகளை (unspoken feelings) வைத்திருந்த அந்தச் சிறுவன், இணையத்தில் வாங்கிய கத்தியைப் பயன்படுத்திப் பலமுறை குத்திக் கொலை செய்ததாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, அந்தச் சிறுவன் விரைவில் கைது செய்யப்பட்டான்.
கொலைக்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சிறுவனின் மனநலன் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும், அந்தச் சிறுவன் அக்டோபர் 21-ஆம் தேதி வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளான் என்று காவல்துறையை தெரிவித்துள்ளது.























