கோலா லங்காட்டில் பலத்த புயல் தாக்குதல்: கம்போங் மேடான், சிஜாங்க்காங் பகுதியில் வீடுகள், உள்ளூர் மண்டபம் சேதம் – மக்கள் அச்சம்

கோலா லங்காட், அக்டோபர் 16 –

கோலா லங்காட், குறிப்பாக கம்போங் மேடான் மற்றும் சிஜாங்க்காங் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள், நேற்று மாலை 3:30 மணியளவில் ஒரு பலத்த புயல் தாக்கியபோது மிகவும் பயங்கரமான தருணங்களை அனுபவித்தனர்.

குடியிருப்பாளர்கள் கூறுகையில் புயல் வீசுவதற்கு முன் கரும் மேகங்கள் அச்சுறுத்தும் வகையில் சுழல்வதைக் கண்டதாக விவரித்தனர்.

இந்தச் சூறாவளிப் புயல் ஒரு உள்ளூர் மண்டபம் உட்படப் பல கட்டிடங்களைச் சேதப்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி பலர் அதிர்ஷ்டவசமாகத் தப்பித்ததை நினைவு கூர்ந்ததுடன், புயல் விட்டுச் சென்ற பெரும் சேதத்தைக் கண்டு கவலையுற்றனர்.

எனவே தான், புயலினால் சேதமடைந்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here