- உள்நாட்டு ஹிட்கள் முதல் உலகளாவியப் பிளாக்பஸ்டர்கள் வரை — கதைகள், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்குகளைக் கொண்டாடும் 67 முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ உங்களுக்கு வழங்குகிறது
- ராகா வானொலியில் தீபாவளிக்கானப் பிரத்தியேகப் பாடலான ‘ஆட்டம் பாட்டம் தீபாவளி’ உட்பட உற்சாகமானப் பண்டிகைச் சிறப்பு நிகழ்ச்சிகளை அனுபவியுங்கள்
- 10,000 குவளைப் புத்துணர்ச்சியூட்டும் மோரைப் பருகும் வாய்ப்பில் உங்கள் பங்கை நீங்கள் தவறவிடாதீர்கள்
கோலாலம்பூர்,
மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, ஒற்றுமை, உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையின் உணர்வைத் தழுவி, இது நம்ம கொண்டாட்டம் என்ற இணக்கமானக் கருப்பொருளுடன் தீபாவளியை வரவேற்கிறது.
தீபத் திருநாள் என்பது துடிப்பானக் கலாச்சாரப் பாரம்பரியம், மகிழ்ச்சியான மரபுகள், சுவையான இனிப்புகள், சுவையான விருந்துகள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகள் மூலம் நம்மை ஒன்றிணைக்கும் ஒரு பகிரப்பட்டக் கொண்டாட்டம் என்பதை இந்த ஆண்டு கொண்டாட்டம் இதயப்பூர்வமாக நினைவூட்டுகிறது.
ஆன் டிமாண்ட், ஆஸ்ட்ரோ கோ மற்றும் சூகா உள்ளிட்ட அதன் தளங்களில் 67 கவர்ச்சிகரமான உள்ளூர் மற்றும் சர்வதேச முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்; பிரத்தியேகப் புலன ஸ்டிக்கர்கள் மற்றும் பணப் பாக்கெட்டுகள்; பல்வேறு இடங்களில் நடைப்பெறும் ஹலோ தீபாவளி நிகழ்வுகள்; மற்றும் பல நிகழ்ச்சிகளின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியானத் தீபாவளி கொண்டாட்ட அனுபவத்தை வழங்குவதில் ஆஸ்ட்ரோ மகிழ்ச்சி அடைகிறது — அனைவருக்கும் ஒரு வளமான மற்றும் உள்ளடக்கியப் பண்டிகை அனுபவத்தை வழங்குகிறது.
சந்தேஷ் இசையமைத்துச், சந்தேஷ், மரியா தாமஸ், பிரித்தா, கே-டி, ஜாடி மற்றும் சன்ஜனா ராஜேந்திரன் பாடிய இது நம்ம கொண்டாட்டம் எனும் ஆஸ்ட்ரோவின் தீபாவளிப் பாடலை மலேசியர்கள் கேட்டு மகிழலாம் – ஜூக்ஸ், ஸ்பாடிஃபை, ஐடியூன்ஸ், ஆப்பிள் மியூசிக் மற்றும் டீசர் ஆகியவற்றில் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கப்பெரும். கூடுதலாக, அனைத்து மலேசியர்களும் ராகா வானொலி மற்றும் அதன் சமூகத் தளங்களில் பல்வேறு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம். இந்தத் தீபாவளிக்குப் பண்டிகைச் சலுகைகள் மட்டும்மல்லாமல், சுற்றுச்சூழல், சமூகம், மற்றும் நிர்வாக உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும் நேர்மறையானச் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தவும் ஆஸ்ட்ரோ சமூகச் சேவையில் ஈடுப்படுகிறது.
தகவல் தொடர்புத் துணை அமைச்சர், யாங் பெர்ஹோர்மாட் தியோ நி சிங், கூறுகையில், தீபாவளி என்பது இருளை நீக்கி ஒளியின் வெற்றியையும், தவறானப் புரிதலை நீக்கி அறிவின் வெற்றியையும், பிரிவினையை நீக்கி ஒற்றுமையின் வெற்றியையும் நமக்கு நினைவூட்டும் ஒரு பண்டிகையாகும். தகவல் தொடர்பு அமைச்சகத்தில் எங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் இருக்கிறது.
தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம் 2025 என்றப் பிரமாண்டமானத் தீபாவளி இசை நிகழ்ச்சியை இணைந்துத் தயாரிக்க முதல் முறையாக, ஆர்டிஎம் மற்றும் ஆஸ்ட்ரோ அசாதாரமானக் கூட்டணியில் இணைந்துள்ளன. கூடுதலாக, நமது இரண்டு தமிழ் வானொலி நிலையங்களான ராகா மற்றும் மின்னல்எஃப்எம்மின் வானொலி அறிவிப்பாளர்கள் மேடையைப் பகிர்ந்துக் கொண்டனர்.
ஆர்டிஎம் மற்றும் ஆஸ்ட்ரோ இரு நிறுவனங்களின் தொலைநோக்குப் பார்வைக்கும், கலைஞர்கள், குழுவினர் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கும் எனது ஆழ்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நமது ஒளிபரப்புத் துறைக்கு ஒரு பெருமைமிக்க மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் மகிழ்ச்சியானப், பிரகாசமான மற்றும் அர்த்தமுள்ளத் தீபாவளி வாழ்த்துகள்.”
ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம் 2025–இல் ஆர்டிஎம் உடன் எங்களின் முதல் கூட்டணியின் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிப்பதால் இந்தத் தீபாவளி எங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
இந்த முயற்சி தீபாவளி நிகழ்ச்சிகளை அனைத்து மலேசியர்களுக்கும் விரிவுப்படுத்துவதோடுப் பகிரப்பட்டக் கலாச்சார அனுபவங்கள் மூலம் ஒற்றுமையை வளர்க்கிறது. எங்கள் தளம் முழுவதும் உள்ளூர் மற்றும் சர்வதேசப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் துடிப்பானக் கலவையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மேலும் சமூகத்தை ஆதரிப்பதற்காக நெஸ்லே, ஃபெர்ன்லீஃப் மற்றும் அஜெண்டா சூரியா கொமினிகேஷன் ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து எங்களின் சுற்றுச்சூழல், சமூகம், மற்றும் நிர்வாக உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறோம்—மலேசியச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் புதிய முயற்சியையும் இது உள்ளடக்கும்.
எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றிக் கூறுவதோடுத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.”
ஆஸ்ட்ரோவில் உற்சாகமான உள்ளூர் மற்றும் சர்வதேசத் தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்


இது நம்ம கொண்டாட்டம் என்ற எங்களின் கருப்பொருளைக் கொண்டாடும் ஆஸ்ட்ரோ மற்றும் ஆர்டிஎம்-இன் முதல் கூட்டு இசை நிகழ்ச்சி, தித்திக்கும் தீபாவளி கொண்டாட்டம் 2025, விளையாட்டு நிகழ்ச்சிகளானத் தீபாவளி வேட்டை மற்றும் பசங்க தீபாவளி ரீயூனியன்; இதயப்பூர்வமானக் குடும்ப நாடக டெலிமூவியானப் புரோஜேக் தீபாவளி; சுவையான உணவுப் பயணத் தொடரான ரசிக்க ருசிக்க ரீலோடட் சீசன் 8 (தீபாவளி ஸ்பெஷல்); ஈர்க்கக்கூடிய இன்ஃபோடெயின்மென்ட் நிகழ்ச்சியானச் சஞ்சிகை (தீபாவளி தீபாவளி ஸ்பெஷல்); சிந்தனையைத் தூண்டும் விவாத நிகழ்ச்சியான அச்சமில்லை அச்சமில்லை (தீபாவளி ஸ்பெஷல்); துடிப்பான இசை நிகழ்ச்சியான அப்-குளோஸ் என் பர்சனல் வித் அனுராதா ஸ்ரீராம்; கற்பனை நகைச்சுவைத் தொடரான ஊர்வசி; மற்றும் பல உள்ளூர் தமிழ் தீபாவளி முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் கவர்ச்சிகரமான வரிசையை ஆஸ்ட்ரோ வழங்குகிறது. திரைப்பட ஆர்வலர்கள் குடும்ப நாடகத் திரைப்படமான மகுடி, திகில் திரில்லர் திரைப்படமான மிருகசிரிஷம், அதிரடி நகைச்சுவை திரைப்படமானச் சுட்டா தல எனக்கு என பலத் திரைப்பட வகைகளின் கலவையை எதிர்ப்பார்க்கலாம்.

தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படங்களானக், லவ் மேரேஜ், ஜின் தி பெட், தேசிங்கு ராஜா 2, டெஸ்ட், மாரீசன், தணல், கண்ணப்பா, ஏஸ், ஹனு-மான், மஞ்சும்மேல் பாய்ஸ், மற்றும் சட்டம் என் கையில்; விவாத நிகழ்ச்சியானச் சிறப்பு பட்டிமன்றம்; இந்தி விருபங்களான ஜாத், ஸ்கந்தா – தி அட்டாக்கர், சார்ஜென்ட் உட்படப் பலச் சர்வதேச நிகழ்ச்சிகளின் விரிவானப் பட்டியலை ஆஸ்ட்ரோ சித்தறிக்கும். அனைத்து மலேசியர்களும் இந்த அற்புதமானத் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ மற்றும் சூகாவில் காணலாம்.


சுற்றுச்சூழல், சமூகம், மற்றும் நிர்வாக உறுதிப்பாடு மற்றும் அர்த்தமுள்ளச் சமூகத் தாக்கத்தை வலுப்படுத்துதல்
தீபாவளி சமூகப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகச், செப்டம்பர் 26, 2025 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரைக் கிளாங்கில் உள்ளக் கேபிஆர் ஃபுட் கேட்டரர்ஸில் உணவுப் பொட்டலங்கள் மற்றும் பண்டிகை உணவுகளை வழங்கித் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிக்க ஆஸ்ட்ரோ நெஸ்லேவுடன் கூட்டாண்மையில் ஈடுப்பட்டது. கூடுதலாக, மலேசியச் சாதனைப் புத்தகத்தில் ஒரு புதியச் சாதனையைப் படைக்கும் முயற்சியாக, அக்டோபர் 17, 2025 அன்று மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரைப் புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் அனைத்து மலேசியர்களுக்கும் 10,000 குவளைச் சுவையான மோருப் பானத்தை இலவசமாக வழங்க ஆஸ்ட்ரோ ஃபெர்ன்லீஃப் மற்றும் அஜெண்டா சூரியா கொமினிகேஷன் ஆகியவற்றுடன் இணைந்துச் செயல்படுகிறது. மேலும், மலாக்காவின் கம்போங் செட்டியில் பி40 சமூகத்தைச் சேர்ந்த 100 பேருக்கு, ஆஸ்ட்ரோ, மேக்சிஸுடன் இணைந்துத் தீபாவளி பராமரிப்புப் பொதிகளை வழங்கும்.
வானொலி முண்ணனியில், தயா கே-வின் உற்சாகமான ராப் இடம்பெரும் கிரிஷ் கே இசையமைத்துக், கதிர் ராகாவோடு இணைந்துப் பாடியப் பிரத்தியேகத் தீபாவளி பாடலான, ஆட்டம் பாட்டம் தீபாவளி உட்பட ராகா வானொலியிலும் அதன் சமூக தளங்களிலும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை அனைத்து மலேசியர்களும் எதிர்பார்க்கலாம்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவும்.
ஆஸ்ட்ரோவின் இது நம்ம கொண்டாட்டம் எனும் தீபாவளி பிரசாரத்தைப் பற்றிய மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.





















