வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
அதன்பிறகு இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது. இந்தியாவுடன் போடப்பட்ட 10 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுளளதாக செய்திகள் வெளியானது.
தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பட்டியல் சரியானது அல்லது என வங்கதேசம் வெளியுறவத்துறை அமைச்சகம் தெரிவித்தள்ளார். வெளியுறவு விவகாரம் ஆலோசகர் எம். தவுஹித் ஹொசைன் “ஒரேயொரு ஒப்பந்தம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளரான ஹொசைன் “இந்தியாவிடம் இருந்து இழுவைப்படகு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதிப்பீடு செய்த பிறகு, வங்கதேசத்திற்கு இதனால் எந்த ஆதாயமும் இல்லை என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம் என்றார்.












