பெர்லின்:
ஜெர்மனியில் இருந்து இங்கிலாந்து நாட்டின் இம்மிங்ஹாம் துறைமுகம் நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. வெரிட்டி என்ற பெயருடைய இந்த கப்பல், சுமார் 300 அடி நீளமுடையது ஆகும். ஜெர்மனிக்கு சொந்தமான ஹெல்கோலாண்ட் தீவு அருகே சென்றபோது, எதிரே மற்றொரு கப்பலும் வந்தது. ஸ்பெயின் நோக்கி சென்ற அந்த கப்பல் திடீரென ஜெர்மனி கப்பல் மீது மோதியது.

இதனையடுத்து கடலோர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் இந்த விபத்தில் ஜெர்மனியின் கப்பல் சேதம் அடைந்து கடலில் மூழ்கியது.
மூழ்கிய சரக்குக் கப்பலின் பணியாளர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேரைக் காணவில்லை என்றும், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த மோதலுக்குப் பிறகு மற்ற இரண்டு கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டனர் என்று ஜெர்மன் கடல் மீட்பு சங்கத்தின் (DGzRS) செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் ஸ்டைபெல்டி கூறினார்.

மேலும் மோதல் நடந்த இடத்தில் பல கப்பல்கள் தற்போது அப்பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், “காணாமல் போனவர்களை மீட்க அவசரகால சேவைகள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றன” என்றும் ஜேர்மன் போக்குவரத்து அமைச்சர் வோல்கர் விஸ்சிங் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.























