புக்கிட் மெர்தாஜாம்:
பினாங்கில் உள்ள மூன்று பள்ளிகளில் இன்று மற்றும் நாளை வீட்டிலிருந்து கற்றல் – கற்பித்தல் (PdPR) முறை நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் அப்பள்ளிகளின் வளாகங்கள் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.
வடக்கு செபெராங் பிறையிலுள்ள SK லஹர் யூய் மற்றும் SK பாடாங் மெனோரா மற்றும் தெற்கு செபெராங் பிறையிலுள்ள SK குவார் பெராஹு ஆகிய பள்ளிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளாகும் என்று மாநில கல்வித் துறை இயக்குனர் முகமடி டிஜியாவுதீன் மாட் சாத் தெரிவித்தார், இதில் மொத்தம் 1,786 மாணவர்கள் உள்ளனர்.
வெள்ளிக்கிழமை முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க இந்தப் பள்ளிகளில் பல வகுப்பறைகள் பயன்படுத்தப்படுவதைக் கண்காணித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.




















