கிள்ளான்,
தினமும் தமது செயல்பாட்டு நேரத்தை காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை நீட்டிக்க செய்வதன் வழி GM Klang புதிய வரலாற்றை செதுக்கியுள்ளது.
அதிலும் காலை முதல் இரவு வரை செயல்ப்படும் இன்னும் ஆக்கப்பூர்வமான சமூக – வாழ்க்கை தர தளமாக அமையப் பெறுவதற்கான பாதையில் மலேசியாவில் மிகப் பெரிய மொத்த விற்பனை மையமான இதன் உருமாற்றாத்தை வெளிகாட்டுகின்றது.
இந்நிலையில் இதன் அறிமுக விழாவிற்கு கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் ஹூசேய்ன் தலைமையேற்றார்.
மேலும் அவருடன் Selangor Tourism Malaysia தலைமை செயல் அதிகாரி சுவா யீ லிங், GM Klang நிர்வாக இயக்குனர் டத்தோ லிம் செங் கோக் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

குறிப்பாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் GM Klang-ற்கு உயிர் நாடியாக விளங்கி வரும் மில்லியன் கணக்கிலான வாடிக்கையாளர்களுக்கு மரியாதை – அங்கீகா செலுத்தும் அடையாளமாக இந்த நிகழ்ச்சி உள்ளது.
வியூக உடன்படிக்கை ஒப்பந்தம் – விளையாட்டு, கேளிக்கை, வாழ்க்கை முறை அங்கங்களுக்கு புதிய உத்வேகம்
விளையாட்டு, கேளிக்கை, வாழ்க்கை முறை அங்கங்களில் 6 புதிய வியூக கூட்டமைப்பாளர்களுடன் ஜிஎம் கிள்ளான் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒப்பந்தம் செய்துள்ளது அதன் உருமாற்ற பயணத்தில் புதிய மைல்கல்லால அமைகிறது.
முன்னதாக கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ ஹாஜி அப்துல் ஹமிட் ஹூசேய்ன், Selangor Tourism Malaysia தலைமை செயல் அதிகாரி சுவா யீ லிங், GM Klang நிர்வாக இயக்குனர் டத்தோ லிம் செங் கோக் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
குறிப்பாக GM Klang தரப்பின் சார்பாக அதன் நடவடிக்கை பிரிவு தலைமை அதிகாரி ஃபூ லோக் பிங் கையெழுத்திட்டார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் Arena (ஃபூட்சால்), Kfitness Gym (உடற்பயிற்சி மையம்), JAQS Padel & Pickle PLT (Pickleball,Paddleball), Doremart (பேரங்காடி), 33 Food Court (உணவு மையம்), Positif@Klang (உணவு வாகனம்) ஆகிய தரப்பினரும் கையெழுத்திட்டனர்.
இந்த தரப்புகள் அனைத்தும் GM Klang-ல் வர்த்தக சூழமை வலுப்படுத்துவதிலும் வாழ்க்கை முறை வாய்ப்புகளை விரிவாக்குவதிலும் முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ளன.

இது குறித்து ஃபூ பேசுகையில், இந்த ஒப்பந்தமானது GM Klang புகழ் பெறற மொத்த விற்பனை மையமாக மட்டுமன்றி வியபாரிகள் முதல் உள்நாட்டு சமூகத்தினர் வரையில் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் வருகையளிக்கக்கூடிய நவீன வாழ்க்கை முதை தளமாகவும் உருமாற்றும் முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
அதிலும் இந்த கூட்டமைப்பு புதிய வர்த்தக வாய்ப்புகளை திறப்பது மட்டுமன்றி GM Klang-ல் B2B2C (Business-to-Business-to-Consumer) கொள்கையையும் வலுப்படுத்துகிறது என்றார் அவர்.
Ceritera Selangor – கலாச்சாரம், சுற்றுலா கூட்டமைப்பு அடையாளம்
இந்த புதிய செயபாட்டு நேர அறிமுகத்தின் அடையாளமாக, சிலாங்கூர் மாநில தேசிய கலை- கலாச்சார இலாகா, Selangor Tourism Malaysia, கிள்ளான் மாநகர் மன்றம் ஆகிய தரப்பினருடனான கூட்டமைப்பு வாயிலாக GM Klang சிலாங்கூர் மாநிலத்தின் எழில்மிகு அழகு, பன்முகத்தன்மையை பறைசாற்றும்
Ceritera Selangor கலாச்சார படைப்பு அங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த படைப்பு வெறும் கேளிக்கை அம்சமாக மட்டுமன்றி கிள்ளான் நகரின் சுற்றுலா தூதர் தரப்புகளின் ஒன்று என்ற முறையில் GM Klang -ன் பங்களிப்பிற்கு ஏற்ப, ” 2026 சிலாங்கூருக்கு வருகை புரியுங்கள் ” பிரச்சாரத்தை வலுப்படுத்தும் அம்சமாகவும் விளங்குகின்றது.
புதிய நேரம் – புதிய பண்புகள்
இன்றைய வருகையாளர்களுக்கு வழங்கப்படும் மொத்த அம்சங்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய புரட்சியாக இந்த நேர அதிகரிப்பு பிரதிபலிக்கிறது என்று GM Klang நிர்வாக இயக்குனர் டத்தோ லிம் செங் கோக் தெரிவித்தார்.

எல்.ஆர்.டி விரைவு ரயில் திட்டம் உட்பட பண்டார் போதானிக் பகுதி வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்நேரமானது, தேவைகளுக்கு இன்னும் அணுக்கமான வாழ்க்கை முறை சுற்றுலா – மொத்த விற்பனை தளமாக புதிய கட்டத்திற்கு GM Klang-ஐ கொண்டு செல்வயற்கான மிகச் சரியான தருணமாகும்.
மேலும் அண்மையில் Malaysia Tourism Quality Assurance (MyTQA) விழாவில் தங்க விருது வென்றுள்ளதும் சேவை தரம் – வாடிக்கையாளர்களுக்கான மொத்த அனுபவத்தை உயத்தும் GM Klang -ன் முயற்சிக்கு உற்சாகத்தை அளிக்கின்றது.
வியூக இட அமைப்பு – வாடிக்கையார்களின் தொடர் ஆதரவு ஆகிய கூடுதல் பலத்தோடு, GM Klang மலேசியா மட்டுமல்லாது பிராந்திய அளவில் வாடிக்கையாளர்களின் தேர்வு மொத்த விற்பனை – வாழ்க்கை முறை தளமாக தொடர்ந்து வளர்ச்சியடையும் என்றார் அவர்.
ஆண்டு முழுவதும் தொடர் பிரச்சாரங்கள் – சுவாரஸ்யமிக்க நடவடிக்கைகள்
புதிய செயல்பாட்டு நேர அளவை (நீட்டிப்பு) முன்னிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க GM Klang பல்வேறு சுவாரஸ்யமான அங்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை;
1. Night Crazy Deals : தினமும் இரவு 7 மணி தொடங்கி சிறப்பு கழிவு.
2. Monthly Lucky Night Draw: Shop & Win : மோட்டார் சைக்கிள், விவேக தொலைக்காட்சி பெட்டி, சலவை இயந்திரம் போன்ற முதன்மை பரிசுகளுடன் நடத்தப்படும் மாதாந்திர அதிர்ஷ்ட குலுக்கல்.
3. Rioooh Malam Sabtu : ஒவ்வொரு வார இறுதியிலும் கேளிக்கை, மாறுபட்ட அனுபவங்களை வழங்கும் வாராந்திர நிகழ்ச்சி.
இந்த முன்னெடுப்புகள் அனைத்தும் ‘2026 மலேசியா சுற்றுலா ஆண்டு’ பிரச்சாரத்திற்கு ஏற்ப தேசிய சுற்றுலா கொள்கையை செயல்ப்படுத்துவதில் GM Klang-ன் பொறுப்புடைமையை வெளிகாட்டுகின்றன.

Dataran GM Klang : சமூக நடவடிக்கைகளுக்கான தளம்
இந்த புதிய செயல்பாட்டு நேர அளவை நீட்டிப்பு சமூக, கலாச்சார, கேளிக்கை, தொழில் முனைவோர் நடவடிக்கைகளை இடம்பெறச் செய்யும் இடமான Dataran GM Klang எனும் முதன்மை நிகழ்ச்சி பகுதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
திறந்தவெளி தன்மையுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பகுதி, பன்முகத்தன்மையை கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கான நிரந்திர தளமாக விளங்குவது மட்டுமன்றி கிள்ளானில் சமூக, வாழ்க்கை முறைக்கான முதன்மை தளமாக GM Klang-ஐ வலுப்படுத்துகின்றது.



















