சிலாங்கூர், திரெங்கானு உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர்:

சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர் மற்றும் கோம்பாக் ஆகிய சிலாங்கூர் மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 4) இரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, திரெங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா மாநிலங்களிலும் இதேபோன்ற வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமான தீவிர கனமழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் பட்சத்தில் இந்த எச்சரிக்கை வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு எச்சரிக்கையும் அதிகபட்சம் ஆறு மணி நேரம் செல்லுபடியாகும்.

பொதுமக்கள் வானிலை தொடர்பான சமீபத்திய தகவல்களைப் பெற www.met.gov.my என்ற MetMalaysia-வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை பார்வையிடவோ, அந்த துறையின் சமூக ஊடகங்களைப் பின்தொடரவோ, அல்லது myCuaca செயலியைப் பதிவிறக்கவோ பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here