மாமன்னரின் பிறந்த நாளையொட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர்

கோலாலம்பூர்,மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் 67ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவில், அனைத்து மலேசியர்களின் சார்பாகவும்,  மாட்சிமை பொருந்திய மாமன்னர், ராணி  உள்ளிட்ட முழு அரச குடும்பத்தினருக்கும் நல்ல ஆரோக்கியம், நீடித்த செழிப்பு, அல்லாஹ்வின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் பாதுகாப்பு கிடைக்க பிரார்த்திப்பதாக பிரதமர் கூறினார்.

இந்த அன்பான நாட்டின் இறையாண்மையின் பாதுகாப்பு குடையாக அவரது ஆட்சி ஆசீர்வதிக்கப்படட்டும். “Dirgahayu Tuanku. Daulat Tuanku” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here