ஓடிடியில் வெளியாகும் ராஷ்மிகாவின் “தி கேர்ள் பிரண்ட்”

சென்னை,ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் ‘தி கேர்ள் பிரண்ட்’. ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்தப் படத்தில் கன்னட நடிகர் தீக்சித் ஷெட்டி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை அனு இம்மானுவேல், ராவ் ரமேஷ், ரோகிணி மற்றும் ராகுல் ரவீந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தீரஜ் மோகிலினேனி என்டர்டெயின்மென்ட் மற்றும் கீதா ஆர்ட்ஸ் ஆகியவற்றின் கீழ் வித்யா கோப்பினீடி மற்றும் தீரஜ் மோகிலினேனி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கடந்த 7ம் தேதி வெளியான ‘தி கேர்ள் பிரண்ட்’ படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது . இப்படம் வசூலில் ரூ 35 கோடியை கடந்துள்ளது. பாடகி சின்மயியின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ‘தி கேர்ள் பிரண்ட்’ படம் வரும் டிசம்பர் 5ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here