1. செடிகளில் கவனம்:
வாஸ்து சாஸ்திரத்தில் செடிகள் வளர்ச்சியை குறிப்பதாக நம்பப்படுகிறது. தென்கிழக்கு திசையில் செடிகளை வைப்பது ஆற்றல் சமநிலையை தக்க வைத்து, நிதி செழிப்பை ஊக்குவிக்கும். வீட்டில் காய்ந்த அல்லது அழுகிய செடிகள் இருந்தால், அது செழிப்பிற்கு தடையாக இருக்கும். எனவே, எப்போதும் பசுமையான செடிகளை பராமரிப்பது அவசியம்.
2. பண லாக்கர் வைக்கும் இடம் :
உங்கள் பண லாக்கரை அல்லது பணத்தை வைக்கும் பெட்டியை வீட்டின் தென்மேற்கு திசையில் வைப்பது மிகவும் சிறந்தது. இந்த திசையில் லாக்கரை வைத்து, அதன் முன்புறம் வடக்கு நோக்கி இருக்குமாறு அமைப்பது அதிர்ஷ்டத்தை தரும். இது உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும், செல்வத்தையும் கொண்டு வரும்.
3. சமையலறையின் இடம் :
சமையலறை ஒரு வீட்டின் ஆரோக்கியத்தையும், செழிப்பையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி, சமையலறை வீட்டின் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வட திசையில் சமையலறை அமைந்தால், அது நிதி நிலையை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, சமையலறையை சரியான திசையில் அமைப்பது மிகவும் முக்கியம்.
4.கசியும் குழாய்களை தவிர்க்கவும்:
வீட்டில் குழாய்களில் நீர் கசிந்து கொண்டு இருந்தால் அது நிதி நிலையை கடுமையாக பாதிக்கும். சுவர்களில் ஈரப்பதம் இருந்தால் அல்லது குழாய்களில் இருந்து தண்ணீர் கசிந்தால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இவை உங்கள் வருமானத்தை பாதித்து, செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, வீட்டை எப்போதும் உலர்ந்ததாகவும், கசிவுகள் இன்றியும் பராமரிப்பது அவசியம்.
5. வீட்டின் வடக்கு பகுதி:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடக்கு திசை செல்வம் மற்றும் செழிப்போடு தொடர்புடையது. இந்த திசை செல்வத்தின் கடவுளான குபேரனால் ஆளப்படுகிறது. இந்த பகுதியை சுத்தமாக வைத்திருப்பது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். வட திசையில் ஒரு நீரூற்றை (water fountain) அமைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. நீரூற்றில் இருந்து வரும் நீர், செல்வத்தின் ஓட்டத்தை குறிக்கிறது.
























