பெற்றோரின் ஆறுதலுக்காக இறந்து பிறந்தாலும் அந்த குழந்தையின் பெயரைப் பதிவுசெய்ய சிங்கையில் திட்டம்.

சிங்கப்பூர்,

எல்லா துறைகளிலும் வளர்ச்சிபெற்றுவரும் சிங்கப்பூர் மனிதாபிமானம் சார்ந்த விஷயங்களிலும் மிக்க கவனம் செலுத்திவருகின்றது. அவ்வகையில் இன்று சிங்கை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மசோதாவின்கீழ், இறந்த நிலை யில் பிறக்கும் குழந்தையின் பெயரைப் பதிவுசெய்ய பெற்றோருக்கு அனுமதி அளிக்கப்படும் என முடிவு எட்டப்பட்டது.

அத்துடன், இறந்த நிலையில் பிறக்கும் குழந்தைக்கான பொருள் விளக்கமும் மாற்றப் படும். இறந்த நிலையில் குழந்தைப் பிறப்புகள், பிறப்புகள் (இதர திருத்தங்கள்) மசோதாவின்கீழ், கருவுற்ற 24ஆம் வாரத்திற்குப் பிறகு உயிரிழக்கும் குழந்தை, இறந்த நிலையில் பிறந்த குழந்தையாக எடுத்துக்கொள்ளப்படும். தற்போது அது 22ஆம் வாரமாக உள்ளது.

உள்துறை, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நாடா ளுமன்றத்தில் மசோதாவை அறிமுகம் செய்தார். அந்த மசோதாவில், தற்போது நடப்பில் உள்ள சட்டங்கள் திருத்தப்படுகின்றன.

2021ன் பிறப்பு இறப்புப் பதிவுச் சட்டத்தின்கீழ், இறந்து பிறந்த குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழில் பெற்றோர் இறந்த நிலையில் பிறக்கும் தங்கள் குழந்தையின் பெயரைப் பதிவுசெய்ய முடியாது.

ஆனால், துக்கத்தில் இருக்கும் பெற்றோருக்கு இது ஆறுதலாக அமையலாம் என்று அதி காரிகள் அங்கீகரித்ததை அடுத்து, குழந்தையின் பெயரைப் பதிவுசெய்ய அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இறந்து பிறக்கும் குழந்தையின் பெயரை அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்ய தேவை யான கட்டமைப்பு மாற்றங்கள் ஏறக்குறைய ஈராண்டுகளில் தயாராகலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய உள்துறை அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

அந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்த, குடிநுழைவுச், சோதனைச்சாவடி ஆணையத் தின் கட்டமைப்புகளில் மேம்பாடுகள் செய்யப்படவேண்டும் என்பதே அதற்குக் கார ணம் என்றார் அவர். ஆணையம் மற்ற மேலும் முக்கியமான மேம்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here